இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்தார் பிரதமர் ரணில்!

Wednesday, October 5th, 2016

 

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நண்பகல் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்..

இந்திய தலைநகர் புதுடில்லியில் உள்ள இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது இந்த சந்திப்பின் போது, இரு தரப்பு உறவு, தமிழக மீனவர்கள் பிரச்சனை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ரணில் சந்தித்து பேசினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அதன்போது உடனிருந்தனர். இன்று மாலை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியூஸிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டு மீண்டும் இந்தியாவுக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ct_mkzEUIAEB3We

Related posts: