இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி நாளை இலங்கைக்கு வருகை : மலையகத்தின் வீதிகள் புனரமைப்பு!

Wednesday, May 10th, 2017

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி நாளை இலங்கைக்கு வருகைதரவுள்ள நிலையில் மலையகத்தின் பலபகுதிகளிலுமுள்ள வீதிகள் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேசவெசாக் தினம் இவ்வாண்டு இலங்கையில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் நிறைவுபெறும் தறுவாயில் இருப்பதாகவம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேசவெசாக் தினத்திற்காக மலையகம் அலங்கரிக்கப்பட்டு எழுச்சிக் கோலம் பூண்டுவருவதாகவும், அங்குள்ளசில வீதிகளும் புனரமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

சர்வதேசவெசாக் தினத்திற்காக இரண்டுநாள் விஜயம் இலங்கைவரும் இந்தியப்பிரதமர் நரேந்திரமோடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் சந்திப்புக்களைநடத்தவுள்ளார். அத்துடன் வெவ்வேறுநாடுகளின் பிரதிநிதிகளும் பங்கெடுக்கவுள்ளமைகுறிப்பிடத்தக்கது

Related posts: