இத்தாலி நிலநடுக்கத்தில் இலங்கையருக்கு பாதிப்பு இல்லை!

Monday, October 31st, 2016
நேற்றுமுன்தினம் இத்தாலி மத்திய பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் அங்குள்ள இலங்கையர்கள் பாதிக்கப்பட்டதாக இதுவரை தகவல் இல்லை என்று ரோமிலுள்ள இலங்கை தூதுரக அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கையர்கள் எவருக்கும் ஒத்துழைப்பு உதவி தேவையாயின் 393 421 254 777 என்ற தொலைபேசியின் இலக்கத்தை பயன்படுத்தி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு தகவல் அறிவிக்க முடியும்.

இத்தாலியில் பெருஜியா மாநிலத்தில் நோர்வா பிரதேசத்தில் ஆறு தசம் ஆறு ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டுள்ளது.அந்த பிரதேச முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை உயிரிழப்பு தொடர்பில் எதுவித தகவல்களும் பதிவாகவில்லை.

i1

Related posts: