இதுவரை 2 இலட்சத்து 57 ஆயிரத்து 477 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் – கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம்!

Wednesday, September 16th, 2020

நாட்டில் இதுவரை 2 இலட்சத்து 57 ஆயிரத்து 477 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் முப்படையினரால் நடத்தி செல்லப்படும் 59 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 6 ஆயிரத்து 255 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் இதுவரை 41 ஆயிரத்து 792 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

அத்துடன் இன்று கட்டாரில் இருந்து 24 பேரும் சென்னை மற்றும் மும்பையில் இருந்து சிலரும் நாடு திரும்பியுள்ளனர்.

அவர்கள் அனைவரும் முப்படையினரால் நடத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது.

Related posts: