இணையவழியில் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, January 19th, 2022

மேலதிக வகுப்புகளை நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் இணையத்தைப் பயன்படுத்தித் தொலைக் காணொளி ஊடாக கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொலை காணொளி ஊடாக கற்பித்தல் மற்றும் கருத்தரங்குகளை நடத்தும் செயற்பாடுகள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ.தர்மசேன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ள 5 ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் உள்ளிட்ட சகல விடங்களுக்கும் நேற்று நள்ளிரவுமுதல் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: