இணக்க சபைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை -நீதி அமைச்சு!

நாட்டில் இணக்க சபைகளில் நிலவும் வெற்றிடங்களை விரைவில் நிரப்புவதற்கு நீதி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
அதற்கமைய, 13 மாவட்டங்களில் இணக்க சபைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப எதிர்பார்க்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மன்னார், பதுளை, கண்டி, கம்பஹா, குருநாகல், ஹம்பாந்தோட்டை, காலி, மொனராகலை, கேகாலை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதுடன் இணக்க சபைகளை வலுவூட்டுவதன் ஊடாக பிரதேச மட்டத்தில் நிலவும் சில பிரச்சனைகளுக்கு தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
வருடம் ஒன்றிற்கு சுமார் 2 இலட்சம் முறைப்பாடுகள் இணக்க சபைகளுக்கு கிடைப்பதுடன் அவற்றின் 100 இற்கு 50 வீதமான முறைப்பாடுகளுக்கு இணக்கப்பாடு எட்டப்படுவதாகவும் நீதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
தமிழக மீனவர்களை கைது செய்யாதீர் - இலங்கையிடம் உலக கடற்றொழிலாளர் பேரவை வேண்டுகை!
அரிசி மாபியாக்களை கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் - அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே!
சுரங்க அகழ்வாராய்ச்சிக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு பணிப்புரை!
|
|