இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Monday, April 18th, 2022

நாட்டின் சில பகுதிகளில் இரவு வேளையில் இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் இவ்வாறு இடியுடன் கூடிய மழைபெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் முற்பகல் வேளையில் மழைபெய்யும் சாத்தியம் நிலவுகின்றது.

இந்தநிலையில், இடியுடன் கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: