இடர் வலயங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கு தீர்மானம் – போக்குவரத்து அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, May 19th, 2020

இடர் வலயங்களாக அடையாளம் காணப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் பொது போக்குவரத்தானது அரச மற்றும் தனியார்துறை சார்ந்த பணியார்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவி்க்கப்படுகிறது.

இந்நிலையில் போக்குவரத்து சேவை அதிகாரிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் எந்தவொரு நபருக்கும் முற்கூட்டிய அனுமதி வழங்காமல் பணிக்குச் செல்வதற்காக வருகைத் தரும் பயணிகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் அவர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: