ஆஸி சர்வதேச மாநாட்டில் கடற்படை தளபதி பங்கேற்பு!

Tuesday, October 10th, 2017

அவுஸ்ரேலிய கடற்படை மூலம் ஏற்பாடுசெய்யப்பட்ட Sea Power 2017- சர்வதேச மாநாட்டில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா கலந்துகொண்டுள்ளார்..

அவுஸ்ரேலியாவின் சிட்னி சர்வதேச மாநாட்டு நிலையத்தில் இந்த மாநாடு கடந்த 03ஆம் திகதி முதல் 05ஆம் திகதி வரை நடைபெற்றது.

கடற்படை மற்றும் தேசம் (Navy and the Nation) என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த மாநாட்டில் 21 நாடுகள் கலந்து கொண்டன.இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடைபெறும் குறித்த மாநாடு இந்த ஆண்டு 10வது முறையாக நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு இணையாக பசிபிக் சர்வதேச கடல்சார் கண்காட்சி மற்றும் சர்வதேச கடல் மாநாடும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்ரேலிய ரோயல் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டீடப் பெரட்ரின் அழைப்பின் பேரில் இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா மற்றும் கடற்படை உதவியாளர் அனுர தனபால ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: