ஆவா குழுவின் பின்னணியில் முன்னாள் போராளிகள் – பொலிஸ் மா அதிபர்!

Tuesday, August 1st, 2017

குடாநாட்டில் இடம்பெற்று வரும் “ஆவா“ குழுவினரின் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் முன்னாள் போராளிகள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார்.

யாழ்.பொலிஸ் தலைமையத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,யாழ்.குடா நாட்டில் தற்போது குற்றச்செயல்களும் வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன. ஆவா குழுவினால் வெட்டப்பட்ட இரு பொலிஸாரின் உடல்நிலை மோசமாக இருப்பதுடன், சத்திரசிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆவா குழுவிற்கு முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் தலைமை தாங்கியுள்ளார். அவர் உட்பட 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். விரைவில் அனைவரையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.யாழ்.மாவட்டம் மட்டுமன்றி வடமாகாணத்தில் இவ்வாறான சம்பவங்களைப் புரிபவர்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரான எனக்கு 0717582222 அல்லது எனது செயலாளருக்கோ 0718592020 தகவல்களை நேரடியாக வழங்க முடியும்.

தகவல்களை வழங்குபவர்கள் தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும்  அவர்கள் குறித்த தரவுகளைப் பகிரங்கபடுத்தமாட்டோம் அதற்கான உறுதிமொழியினையும் நான் வழங்குகின்றேன்.மணல் கடத்தல் மற்றும் கப்பங்களுக்கு எதிரான தகவல்களையும் உடனடியாக தெரிவிப்பதுடன், இவ்வாறான குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்” என பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மேலும் தெரிவித்தார்.

Related posts: