அனைத்து தபால் நிலையங்களையும் நாளை திறக்க தீர்மானம் – பொருளாதார மையங்களும் மேலும் இரு தினங்களுக்கு திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ அறிவிப்பு!

Tuesday, August 31st, 2021

நாடு முழுவதும் உள்ள அனைத்து தபால்நிலையங்களும் உப தபால் நிலையங்களும் நாளை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதியோர் உதவித்தொகை மற்றும் பொதுமக்களுக்கான கொடுப்பனவுகளை வழங்கும் திட்டத்தை முன்னெடுப்பதற்காக நாளையும் நாளைமறுதினமும் நாடு முழுவதும் உள்ள அனைத்து தபால் நிலையங்களையும் உப தபால் நிலையங்களையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

நாட்டில் உள்ள அனைத்து விசேட பொருளாதார மையங்களும் மேலும் இரு தினங்களுக்கு திறக்கப்படவுள்ளதாக  இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதற்மைய, நாளை (01) மற்றும் நாளைமறுதினம் (02) ஆகிய இரு நாட்களில் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக மாத்திரம் விசேட பொருளாதார மையங்கள் திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலாக்கப்பட்ட காலப்பகுதியில் முன்னதாக 4 நாட்களுக்கு பொருளாதார மையங்கள் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: