ஆழ்கடல் கண்காணிப்பு ரோந்துக் கப்பல் கொழும்பு வருகை!

இலங்கை கடற்படைக்காக இந்திய கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தினால் நிர்மானிக்கப்பட்ட முதலாவது தொழில் நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு ரோந்துக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இன்று காலை வருகை தந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றனர்.நவீன போர்கப்பலான இக்கப்பல் இலங்கை கடற்படை வரலாற்றில் புதிதாக வாங்கப்பட்ட முதல் கப்பலாக குறிப்பிடத்தக்கது. இக்கப்பலை தயாரிப்பதற்கு சுமார் 66.55 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கப்பல் இலங்கை கடற்படையிடம் கையளிக்கும் நிகழ்வு கடந்த ஜூலை 22ம் திகதி நடைபெற்றது. மேலும் இலங்கை கடற்படைக்காக நிர்மாணிக்கப்படுகின்ற இரண்டாவது கப்பல் 2018 ஆண்டில் இலங்கை கடற்படையினரிடம் கையளிக்கப்படவுள்ளது.
Related posts:
அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை சீர்குலைக்க முடியாது - அமைச்சர் கயந்த கருணாதிலக்க!
அரசாங்கத்தை தொழிற்சங்கங்களினால் ஒருபோதும் வீழ்த்த முடியாது – பிரதமர்!
முடக்கல் நிலை நீக்கப்பட்டாலும் மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவது அவசியமாகும் - யாழ் மா...
|
|