ஆலயத்திற்கு வருவதனை தவிர்த்துக்கொள்ளுங்கள் – பக்தர்களிடம் நயினாதீவு ஆலய நிர்வாகம் கோரிக்கை!

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு பக்தர்கள் வருவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு ஆலய அறங்காவலர் சபையினர் கோரியுள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள அறிவித்தலில் –
சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் மட்டுமே நித்திய பூஜைகள் இடம்பெறுகின்றன.
அத்துடன் அடியவர்களின் நேர்த்திகள், அபிசேகங்கள் என்பன தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.அவை மீள ஆரம்பிக்கும் போது அடியவர்களுக்கு அது தொடர்பில் அறிவிக்கப்படும்.
அதனால் தற்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டு ஆலயத்திற்கு வருகை தருவதனை தவிர்த்து உங்கள் வீடுகளில் இருந்தவாறு அம்பாளை வேண்டிக்கொள்ளுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
000
Related posts:
மருத்துவக் கல்வி: ஆகக்குறைந்த கல்வித்தகைமை வெளியானது!
1000 கிலோ கிராம் போதைப் பொருட்களை அழிப்பதற்கு நடவடிக்கை!
சர்ச்சையை ஏற்படுத்திய தொலைபேசி உரையாடல் தொடர்பில் சட்டமா அதிபரின் கோரிக்கை!
|
|