ஆரியகுளம் சந்திப் பகுதியில் விபத்து – மினி வானுடன் மோதி மோட்டார் சைக்களில் சென்றவர் உயிரிழப்பு!

Tuesday, February 8th, 2022

யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்திப் பகுதியில் தரித்து நின்ற மினி வான் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்களில் சென்ற நபர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் –

ஆரியகுளம் சந்திப் பகுதியில் வீதி ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த மினி வான் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று 08 அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஆண் ஒருவர் தலைப் பகுதியில் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிய வருகின்றது..

000

Related posts: