ஆயுத முனையில் இளம் பெண் கடத்தப்பட்டார்!
Saturday, April 15th, 2017
வாள்கள், பொல்லுகளுடன் வந்த இனம்தெரியாத நபர்கள் இளம் பெண் ஒருவரை கடத்திச்சென்றுள்ளதாக கடத்தப்பட்ட பெண்ணின் தாயாரால் முறைப்பாடு ஒன்று மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மானிப்பாய் பொன்னாலை வீதி பகுதியில் நேற்று முன்தினம் மாலை ஒரு கார் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிளில் வாள்கள், கத்தியுடன் வந்த 8 பேர் அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு சென்று கலவரம் செய்துள்ளனர்.
அப்போது அந்த வீட்டில் இருந்த 20 வயதுடைய இளம் பெண் வீட்டை விட்டு வெளியே ஓடிச்சென்றுள்ளார்.
அவரை துரத்திச் சென்ற இனம் தெரியாத நபர்கள் அப் பெண்ணை பலவந்தமாக காரில் ஏற்றிச் சென்றுள்ளனர்.இந்நிலையில் தனது மகளை மீட்டுத் தருமாறு மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம் தாயாரால் முறைப்பாடு பதிவு செய்யப்ப ட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
|
|