ஆட்பதிவுத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

Thursday, January 18th, 2018

தேசிய அடையாள அட்டைகளைப் ஒருநாள் சேவையில் பெற்றுக் கொள்ள விண்ணப்பித்தவர்களுக்கான அடையாள அட்டைகள் தபால்மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெருமளவானோர் ஒருநாள் சேவையின் ஊடாக அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஆட்பதிவு திணைக்களத்துக்கு சென்றுள்ளனர். திணைக்கள சேவைகள்இடைநிறுத்தப்பட்டதால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி பணிகளை முன்னெடுக்கும் பல இயந்திரங்கள் பழுதடைந்துள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டதாக ஆட்பதிவுத் திணைக்கள அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒருநாள் சேவைக்காக விண்ணப்பித்தவர்களது அடையாள அட்டைகள் தபால்மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related posts: