ஆசிரியர் சம்பள முரண்பாடுகளை தீர்க்க நாட்டில் போதுமான நிதி பலம் இல்லை – பாதீட்டினூடாக தீர்வு காண நடவடிக்கை என அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவிப்பு!

ஆசிரியர் சம்பள முரண்பாடுகளை தீர்க்க வேண்டிய நிலை காணப்பட்டாலும் நாட்டின் தற்போதைய நிதி நிலைமைகளின் அடிப்படையில் தேவையான மாற்றங்களைச் செய்ய போதுமான நிதிப் பலம் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பதிரண மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்க்க பிரதமர் தலைமையிலான துணை குழுவை நியமிக்க அமைச்சரவை முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் நாட்டின் தற்போதைய நிதி நிலைமைகளில் உடனடியாக மாற்றங்களைச் செய்ய அரசாங்கத்தால் முடியவில்லை என்றும் அமைச்சர் ரமேஷ் பதிரண குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே ஆசிரியர் சம்பள திருத்தம் தொடர்பாக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழிவுகளை சமர்ப்பிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
|
|