ஆசிரியரின் வீட்டில் தங்கச் சங்கிலி, பணம் என்பவற்றை அபகரித்துச் சென்ற கொள்ளையர்கள்!

Tuesday, January 9th, 2024

யாழ்ப்பாணம் – நீர்வேலியில் ஆசிரியரொருவரின் வீட்டினுள் சென்ற கொள்ளையர்கள் தங்கச் சங்கிலி, பணம் என்பவற்றை அபகரித்துச் சென்றுள்ளனர்.

இன்று (09) அதிகாலை வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது, வீட்டினுள் புகுந்த கொள்ளையர்கள்  உறங்கிக் கொண்டிருந்தவரின் தங்கச் சங்கிலியை அறுத்ததுடன் ஒரு தொகை பணத்திணையும் சூறையாடிச் சென்றுள்ளனர்.

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த வீட்டில் வசிக்கும் கணவன் மனைவி இருவரும் ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

000

Related posts: