அழகுசாதனப் பொருட்களின் இறக்குமதி குறித்து விரைவில் தீர்மானம் – சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடுவதாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் தெரிவிப்பு!

Tuesday, March 23rd, 2021

அழகுசாதனப் பொருட்களின் இறக்குமதியை முறையாகக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடி முடிவொன்றை எட்ட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் வாசனைத் திரவியங்கள் மற்றும் அழகுசாதன பொருட்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸாமில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் அழகுசாதனப் பொருட்களின் இறக்குமதி கடந்த சில ஆண்டுகளில் 100 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் மொஹமட் முஸாமில் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் ஒரு தரத்திற்கு ஏற்ப குறித்த பொருட்களை இறக்குமதி செய்வது குறித்து சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் முறையான திட்டம் செயற்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: