அறிவியல் நகரைத் தந்த ஆற்றல் மிகு கரங்களுக்கு அதிகாரத்தை வழங்குங்கள் – ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்!

Sunday, September 2nd, 2018

அறிவியல் நகரைத் தந்த ஆற்றல் மிகு கரங்களுக்கு அதிகாரங்களை வழங்குங்கள். அதனூடாகவே தமிழ் மக்கள் கண்டுவரும் கனவுகள் யாவும் ஈடேறும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பளை பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

இறுதி யுத்தம் நடைபெறுவதற்கு முன்னரும் சரி யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதும் சரி எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சராக இருந்த போது கிளிநொச்சி மாவட்டத்திற்கு மட்டுமல்லாது வடக்கின் அனைத்து மாவட்டங்களுக்கும் உணவு, மருந்துப் பொருள் முதற்கொண்டு தேவையான அனைத்து வகையான அத்தியாவசிய பொருட்களையும் பாரபட்சமற்ற வகையில் அனுப்பி வைத்து மக்களின் தேவைகளை நிறைவுசெய்து துன்பங்களை போக்கியவர்.

யுத்தம் நிறைவுக்கு வந்தபின்னர் அழிந்து கிடந்த கிளிநொச்சி மாநகரை துக்கி நிறுத்தவென அதன் மீது விஷேட கவனம் செலுத்தி அதனை தூக்கி நிறுத்தினார் டக்ளஸ் தேவானந்தா. இந்நிலையில்தான் 1974 ஆம் ஆண்டுகளிலிருந்து தமிழ் சமூகத்தின் கனவாக இருந்துவந்த யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்துக்கான பொறியியற் பீடத்யும் விவசாய பீடத்தையும் தனது மதிநுட்ப சிந்தனையால் பெற்றுத்தந்து நாம் கண்டுவந்த கனவுகளை நனவாக்கிக் காட்டினார் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா.

அதுமட்டுமல்லாது கிளிநொச்சி பகுதியின் உள்கட்டுமாணங்கள், விவசாயம், கடற்றொழில் முதல் மக்களது வாழ்வாதாரம் வரையான அனைத்து தேவைப்பாடுகளையும் தன்னிடம் இருந்த குறைந்தபட்ச அரசியல் பலத்தை கொண்டு சாதித்துக் காட்டிய டக்ளஸ் தேவானந்தா என்னும் ஆற்றல் மிகு தலைவரின் கரங்களுக்கு அதிகாரங்களை வழங்குங்கள். இதனூடாகவே எதிர்காலத்தில் தமிழ் மக்கள் கண்டுவரும் கனவுகள் யாவும் ஈடேறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: