அறிகுறி தெரியாது : கொரோனா தொற்றியிருக்கும் – பெற்றோர்களுக்கு விசேட அறிவிப்பு!

Monday, April 6th, 2020

நோய் அறிகுறி தென்படாத சிறுவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்க கூடும் என சிறுவர்களுக்கான நோய் தொடர்பான விஷேட நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக வைரஸ் தொற்றக் கூடும் என்ற அச்சம் உள்ள பின்னணியில் அது தொடர்பில் சிறார்கள் மற்றும் தாய்மார் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டுமாயின் அரசாங்கம் கூறிய சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

விசேடமாக பெற்றோர் தங்களுது பிள்ளைகளை பொது இடங்களுக்கு காவிச் செல்வதனை தவிர்த்துக்கொள்ளுமாறும்  சிறுவர்களுக்கான  நோய் தொடர்பான விஷேட நிபுணர் தீபால் பெரேரா கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts:

விழா மண்டபங்களின் கொள்ளளவில் 50 சதவீத விருந்தினரை அனுமதித்து நிகழ்வுகளை நடத்த அனுமதிக்குமாறு இலங்கை ...
கிளிநொச்சி மாவட்டத்திற்கு மற்றொரு வரப்பிரசாதத்தை பெற்றுத்தந்துள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – மாவ...
கிளிநொச்சி முகாவில் பகுதியிலும் சமுர்த்தி சௌபாக்கியா உற்பத்திக் கிராமம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவ...