அரியாலையில் இடி வீழ்ந்தது;  தென்னை மரங்கள் பற்றி எரிவு!

Tuesday, May 22nd, 2018

அரியாலை தபால் கட்டை சந்தியில் இடி விழுந்து தென்னை மரங்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பல பகுதிகளிலும் வெள்ளம், மண்சரிவு, இடி மின்னல் போன்ற இயற்கை அனர்த்தங்களினால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அண்மையில் இடி மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி நால்வர் உயிரிழந்ததுடன், மண்சரிவுகளாலும், வெள்ளத்திலும் சிக்குண்டு இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று மதியம் யாழ். தபால் கட்டை சந்தியில் இடி விழுந்து தென்னை மரங்கள் பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் நல்லூர் பிரதேசசபைக்கு சொந்தமான தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: