அரிசி இறக்குமதி ஒப்பந்தத்தில் மியன்மார் இலங்கையுடன் கைச்சாத்து!

Monday, February 13th, 2017

மியான்மரிலிருந்து சுமார் 50 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இலங்கை ஏற்றுமதி செய்வதற்கு அந்நாட்டின் ஐந்து நிறுவனங்கள் கைச்சாத்திட்டுள்ளதாக, அந்நாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் தான் மயின்ட் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஸ்ரீலங்காவுக்கான மியன்மார் தூதுவர் கே.கருணாரத்னவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றிலும் கைச்சாத்திட்டுள்ளார்.

குறித்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் எதிர்வரும் ஜூன் மாதமளவில், சுமார் 50 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை ஸ்ரீலங்காவுக்கு ஏற்றுமதி செய்யவுள்ளதாக, மியன்மார் அரிசி ஏற்றுமதி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த வருடம் ஏற்பட்ட வறட்சி காரணமாக ஸ்ரீலங்காவின் அரிசி உற்பத்தியானது சுமார் 200 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவில் குறைந்துள்ளதனால், ஸ்ரீலங்காவுக்கு குறித்த ஐந்து மியன்மார் நிறுவனங்களிடமிருந்தும், அரிசியை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

21878B07-1544-4474-9FD8-3E93872ED572_cx0_cy10_cw0_w987_r1_s_r1

Related posts: