அரச நிறுவனங்களுக்கு மூவாயிரம் மொழி உதவியாளர்கள் !
Thursday, March 1st, 2018தமிழ் சிங்களம் ஆகிய மொழிகளில் பணியாற்றக்கூடிய மூவாயிரம் மொழி உதவியாளர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள்.
இந்த நியமனங்களுக்கான அமைச்சரவை அங்கீகாரம் விரைவிர் கிடைக்கவிருப்பதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்
உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்துஇ பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு இதற்காக விண்ணப்பிக்க முடியும். இது தொடர்பான விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படவிருப்பதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு அறிவித்துள்ளது.
சாதாரண தரப் பரீட்சையில் சிங்களம் தமிழ் ஆகிய மொழிகளில் திறமை சித்தி பெற்றிருப்பது அவசியமாகும்.
முதற்கட்டமாக தெரிவு செய்யப்படும் 500 பேருக்கு ஆறு மாத பயிற்சி வழங்கப்படவிருக்கிறது. தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அரச நிறுவனங்களுக்குச் செல்லும் மக்கள் எதிர்நோக்கும் மொழிப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது இதன் நோக்கமாகும். தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் எமது செய்திப்பிரிவுக்கு தொவித்தார்.
இணைத்துக் கொள்ளப்படும் மொழி உதவியாளர்கள் அரச நிறுவனங்களில் இணைத்துக் கொள்ளப்படவிருக்கிறார்கள். வடக்குஇ கிழக்கு மாகாணங்களுக்கு இதன் போது முக்கியத்துவம் வழங்கப்படவிருக்கிறது. பொலிஸ் நிலையங்கள்இ மாகாண சபைகள்இ பிரதேச செயலகங்கள் என்பனவற்றிற்கு மொழி உதவியாளர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.
Related posts:
|
|