அரச நிறுவனங்களுக்கான தபால் விநியோகம் இடைநிறுத்தப்படும் – கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி!

Friday, December 23rd, 2016

தபால் ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு 14 நாட்களுக்குள் தீர்வு பெற்றுத்தர அரசாங்கம் முன்வராதுவிடின் அரச நிறுவனங்களுக்கான தபால் விநியோகம் இடைநிறுத்தப்படும் என கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி அறிவித்துள்ளது.

முன்னணியின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார இதனைக் குறிப்பிட்டுள்ளார். தபால் சேவை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையின் பின்னால் எந்தவொரு அரசியல் நோக்கங்களும் கிடையாது எனவும் பொது நலன்களே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தபால் ஊழியர்களுடன் விளையாட்டுக் காட்டாமல் அவர்களது தேவைகளுக்கு செவிசாய்க்குமாறும் அவர் அரசாங்கத்தைக் கேட்டுள்ளார்.

Post-Det.-720x480

Related posts: