அரச நிறுவனங்களில் தகவல்களை மக்கள் பெற்றுக் கொள்ள புதிய வேலைத்திட்டம் – இன்றுமுதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவிப்பு!

Saturday, September 3rd, 2022

அரச நிறுவனங்களில் தகவல்களை மக்கள் பெற்றுக் கொள்வதற்காக இன்றுமுதல் புதிய வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தடையின்றி விரைவாக தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் சகல அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களை பிரச்சினைக்கு உட்படுத்தாத வகையில் குறித்த தகவல்களை வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: