அரச சேவை பட்டதாரிகளின் வயதெல்லை அதிகரிப்பு!

Tuesday, June 5th, 2018

அரச சேவையில் பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான வயதெல்லை 45 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் செயலர் கே.டி.எஸ் ருவன் சந்திர தெரிவித்தார்.

இந்த புதிய நடைமுறைக்கு அமைய 2019ஆம் ஆண்டில் பட்டதாரிகள் அனைவரும் மூன்று கட்டங்களாக அரச சேவைக்குள் இணைத்துக் கொள்ளப்படுவர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அரச சேவையில் பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான வயதெல்லை 35 ஆக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால் இந்த வயதெல்லையை 45ஆக அதிகரிக்குமாறு வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை முன்வைத்தனர். அதற்கமைய வயதெல்லையை 45ஆக உயர்த்துவதற்கு தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு முன்வைத்த யோசனைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே 5 ஆயிரம் பட்டதாரிகள் அடுத்த மாதமும் 15 ஆயிரம் பட்டதாரிகள் எதிர்வரும் செப்ரெம்பரிலும் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கான பயிற்சியாளர்களாக நியமிக்கப்படவுள்ளனர். 2019ஆம் ஆண்டில் மூன்று கட்டங்களில் பட்டதாரிகளை அரச சேவைகளில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போதே முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

Related posts:


ஜனநாயக போராளிகள் அமைப்பின் உறுப்பினர் இனியவனின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி!
இலங்கை - அவுஸ்திரேலியா இடையே நடைமுறை ஒத்துழைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது - வெளிநாட்டு அமைச்சர் தினேஷ...
நிபந்தனைகளை மீள்பரிசீலனை செய்யுங்கள் - மின் நெருக்கடி தொடர்பில் மின்சக்தி அமைச்சருக்கு ஜனாதிபதி கோட்...