அரச சேவை  கட்டியெழுப்பப்படும் – அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார!

Thursday, January 25th, 2018

அரசியல் பழிவாங்கல் அற்ற அரசாங்க சேவையை கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளம் பத்தாயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது. 2006ஆம் ஆண்டு முதல் நிலவிவந்த ஓய்வூதிய சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு வழங்கப்பட்டிருக்கிறது.

சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமையினால் அரச சேவைகள் சுயாதீனமாக இயங்குகின்றன. அரச ஊழியர்களுக்கு வெளிநாடுகளிலும் பயிற்சி வழங்கப்படவிருக்கிறது.

அக்ரஹார காப்புறுதி முறைமை ஓய்வூதியம் பெறுவோருக்கும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அரச ஊழியர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படுகிறது. அரச சேவையிலிருந்து ஊழலை முற்றாக ஒழிக்கும் நோக்கில் தமது அமைச்சு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுடன் இணைந்து விசேட வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதாகவும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மேலும் தெரிவித்தார்.

Related posts: