அரசுக்கு சொந்தமான உர நிறுவனங்கள் மூலம் சேதன பசளை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

Tuesday, September 28th, 2021

அரசுக்கு சொந்தமான உர நிறுவனங்கள் மூலம், நெல் தவிர்ந்த ஏனைய பயிர்ச்செய்கைகளுக்கான சேதன பசளையை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்போது, 2021 /2022 பெரும் போகத்திற்கான சேதன பசளை மற்றும் இயற்கைக் கனிமங்கள் மற்றும் தாவர ஊட்டற் பதார்த்தங்களை இறக்குமதி செய்வதற்காக இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நெற்செய்கைக்குத் தேவையான சேதன பசளையை அரச உர நிறுவனங்களால் இறக்குமதி செய்வதற்கும், ஏனைய பயிர்களுக்கு தேவையான சேதன உரங்களை அனுமதிப்பத்திரம் கொண்ட உர நிறுவனங்களால் இறக்குமதி செய்து, போட்டி விலைமனுக் கோரலின் அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்குவதற்கும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஏனைய பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளும் விவசாயிகளுக்குத் தேவையான சேதன உரத்தை தாமதமின்றி போட்டி விலையின் கீழ் விநியோகிப்பதற்கு இயலுமான வகையில் இரண்டு அரச உர நிறுவனங்கள் மூலம் சேதன பசளையை இறக்குமதி செய்வதற்காகவும் விவசாய அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: