அரசியல் தளம்பல்: தடுமாறுகிறது இலங்கையின் பொருளாதாரம் – உலக வங்கி!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் உறுதியற்ற தன்மையானது பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
21/4 தாக்குதல் மற்றும் அதன் பின்னர் இடம்பெற்ற சில சம்பவங்களால் இலங்கையில் அரசியல் ஆட்டம் கண்டுள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்கனவே அதிருப்திநிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் எதிர்காலத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல் என்பன இலங்கையின் பொருளாதாரத்தை மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமெனில் நாட்டில் அரசியல் ஸ்தீரத்தன்மை உருவாகவேண்டும்.
அதை ஏற்படுத்துவதற்கு ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு தாதியர் சங்கம் குற்றச்சாட்டு!
எதிர்வரும் 22ஆம் திகதி ஆழ்கடல் ரோந்துக் கப்பல் இலங்கை கடற்படையிடம்!
யாழ்ப்பாண பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்கள் கவன ஈர்ப்புப் போராட்டம்!
|
|
புரநெகும வேலைத்திட்டத்தின் 3ஆம் கட்டம் விரைவில் ஆரம்பம் - ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ!
ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்படும் அஞ்சல் பொருட்களுக்கான வரிக்கொள்கையில் திருத்தம் - அஞ்சல்மா அதிபர்...
வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் முறையான பி.சி.ஆர் அறிக்கைகளை கொண்டு வர வேண்டியது அவசியம் - இராணுவத் ...