அரசியல் உரிமை பேசி தேர்தலில் வென்றவர்கள் என்றுமே மக்களை திரும்பி பார்த்தது கிடையாது – ஈ.பி.டி.பி.யின் தேசிய அமைப்பாளர்!
Saturday, October 14th, 2017
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசியல் உரிமை பேசி தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் மக்களை ஒருபோதும் திரும்பிப்பார்க்காமல் ஏமாற்றிவருகின்றனர் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்றைதினம் காத்தார் சின்னக்குளம் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிலித்துள்ளாரர்.
அவர் மேலும் தெரிவிக்கையில் 30 வருடங்களுக்கு மேலாக மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் காணப்படவில்லை. அபிவிருத்தி அரசியல் வேறானதாகவும் உரிமை அரசியல் வேறானதாகவும் இருக்கும் நிலையில் உரிமை அரசியல் பேசி மக்களின் வாக்குகளை அபகரித்துக்கொண்டவர்கள் மக்களை வெற்றிக்குப் பின்னர் ஒருபோதும் திரும்பிப்பார்ப்பதில்லை.
இருந்தபோதிலும் எமக்கு கிடைக்கப்பெற்ற குறைந்தளவிலான அரசியல்பலத்தைக்கொண்டு நாம் மக்களுக்கான பணிகளை முடிந்தவரையில் முன்னெடுத்துவருகின்றோம்.
அரசியல் உரிமைப்பிரச்சினைக்கு நீண்டகாலமாக நாம் என்ன திட்டத்தை முன்வைத்தவந்தோமோ அத்திட்டத்தை இன்று பலதரப்பட்டோரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் நாம் வெற்றிபெற்றிருப்போமேயானால் மக்களுக்காக தேவைகள் பலவற்றை நிவர்த்திசெய்து பல புரட்சியான அபிவிருத்திகளை நிச்சயம் முன்னெடுத்திருப்போம்.
இந்த இடத்திற்கு வருகைத்தந்திருந்’தபோதுதான் இங்குள்’ள வீதிகள் பல நீண்டகாலமாக செப்பனிடப்படாமல் இருப்பதை காணமுடிகின்றது என்பதுடன் மக்களின் நாளாந்த மற்றும் அடிப்படைத் தேவைகளும் உரியமுறையில் தீர்வுகாணப்படாதிருப்பதையுயையும் அவதானிக்க முடிகின்றது என்றும் பசுபதி சீவரத்தினம் சுட்டிக்காட்டினார்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளர் திலீபன், கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் ஆகியோர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் உடனிருந்தனர்
Related posts:
|
|