அரசியல் அரங்கில் தமிழ் சக்திகளை ஒன்றிணைக்கும் செயற்பாடுகளுக்கு ஈ.பி.டி.பி தொடர்ந்தும் வலுச்சேர்க்கும்!
Monday, December 10th, 2018ஆயுத ரீதியான போராட்டம் 2009ஆம் ஆண்டு தோல்வி கண்டதன் பின்னர், தமிழ் பேசும் மக்களுடைய அரசியல் உரிமைப் போராட்டத்தில் பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சியாக எமது மக்களையும், தலைமைத்துவத்தை இழந்து தவிக்கின்ற அல்லது வேதனையில் ஆழ்ந்துள்ள அனைத்து சக்திகளையும் ஒருங்கமைத்து ஒற்றுமையுடன் வழிநடத்திச் செல்ல வேண்டிய பொறுப்புள்ள கட்சியாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இருப்பதனால், அனைத்து முன்னாள் போராளிகளுடனும், அமைப்புக்களுடனும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நேசக் கரத்தினை நீட்ட வேண்டிய வரலாற்றுக் கடமையை உணர்ந்து கொண்டு, மூத்த தோழர்களினாலும், தலைமையினாலும் முன்னெடுக்கப்படுகின்ற பல்வேறுபட்ட ஒற்றுமை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இவற்றை முன்னெடுத்துச் செல்கின்ற சகோதர சக்திகளையும், சமூக ஆர்வலர்களையும் சந்தித்து மேற்கொள்ளப்படுகின்ற அரசியல் கலந்துரையாடல்களின் ஒருகட்டமாக இலண்டன் மாநகரில் நேற்றைய தினம் (08.12.2018) அரசியல் விமர்சகரும், மூத்த அரசியல்வாதியும், சமூக ஆர்வலருமான தோழர் சிவலிங்கம் தலைமையில் தோழர்களான சோதிலிங்கம், ஜெயபாலன் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த தோழர்களான திலக், மாட்டின் ஜெயா, ரமேஷ், மனோ ஆகியோர் சகிதம் அரசியல் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடலில், வெவ்வேறான அரசியல் தளங்களில் பயணிப்பவர்கள் முரண்பாடான அரசியல் நடவடிக்கைகளில் எமது மக்களின் நலன்களிலிருந்து, எவ்வாறான பொது முடிவுகளை எட்டுவது என்பது தொடர்பாகவும், அரசியல் சக்திகளுக்கிடையிலான ஒற்றுமை விடயத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எவ்வாறு இயங்குகிறார் என்பதை ஆணித்தரமாகவும், எதிர்கால ஒற்றுமை நடவடிக்கைகளுக்கு பலம் சேர்க்கும் விதமாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செயற்படும் அதேவேளை, அதன் தலைமையும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்பதில் யாரும் ஐயம் கொள்ளத் தேவையில்லையென கட்சி சார்பாக மூத்த தோழர்களால் எடுத்துரைக்கப்பட்டிருந்தது.
Related posts:
|
|