அரசியலமைப்புச் சபையில் இருந்து விலகுவது குறித்து தீர்மானிக்கவில்லை – தினேஷ் குணவர்தன!

Friday, July 21st, 2017

அரசியலமைப்பு சபையில் இருந்து விலகுவது சம்பந்தமாக கூட்டு எதிர்க்கட்சி இதுவரை தீர்மானிக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்..

இது தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியினர் தற்போதும் பேச்சு நடத்திக் கொண்டிருப்பதாக அவர் கூறினார். எவ்வாறாயினும் கூட்டு எதிர்க்கட்சி புதிய அரசியலமைப்புக்கான சபை மற்றும் செயற்பாட்டுக் குழுவில் பணியாற்றிக் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

இதேவேளை எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் அரசியலமைப்பு சபையில் இருந்து விலக முடியாது என்று பிரதியமைச்சர் அஜித். பி. பெரேரா கூறினார். அவ்வாறு விலகுவதாயின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

Related posts: