அரசாங்கம் படையினரை பாதுகாக்கும் -மஹிந்த அமரவீர!
Wednesday, September 6th, 2017அரசாங்கம் நிபந்தனைகள் எதுவமின்றி படையினரை பாதுகாக்கும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை சூரியவெவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
அவர் மேலும் கூறுகையில் சரத் பொன்சேகாவையும் நான் தேசத்துரோகியாக பார்க்கவில்லை, போரில் பாரியளவு சேவையாற்றியிருந்தார், காயமடைந்திருந்தார். அதேபோன்று ஜகத் ஜயசூரியவையும் நான் அவ்வாறு பார்க்கவில்லை. ஏனைய அனைத்து படைவீரர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளனர்.எனவே ஜனாதிபதியும் இலங்கை அரசாங்கமும் இந்த அனைத்து படைவீரர்களுக்காகவும் நிபந்தனையின்றி குரல் கொடுக்கும், அவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்.சரத் பொன்சேகா வெளியிட்டு வரும் கருத்துக்கள் தொடர்பில் விரைவில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|