அரசாங்கம் உளவியல் யுத்தத்தில் ஈடுபடுகின்றது – இலங்கை ஆசிரியர் சேவையின் பிரதம செயலாளர் குற்றச்சாட்டு!

Tuesday, September 29th, 2020

ஆசிரியர்களின் விபரங்கள் தொழிற்சங்க ஈடுபாடுகள் அவர்களது அரசியல் தொடர்புகள் குறித்த விபரங்களை பொலிஸார் அதிபர்கள் ஊடாக திரட்டுகின்றனர் என தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் சேவை பொலிஸார் ஆசிரியர்களையும் அதிபர்களையும் அச்சுறுத்துகின்றனர் எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சேவையின் பிரதம செயலாளர் மகிந்த ஜயசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்குமாறு கல்வியமைச்சின் செயலாளரிடம் எழுத்து மூல வேண்டுகோளை விடுக்கப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட தகவல்களை திரட்டுவதன் மூலம் அரசாங்கம் உளவியல் யுத்தத்தில் ஈடுபடுகின்றது என தெரிவித்துள்ள அவர் அவர்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடும்போது அவர்களின் தொழில் சங்கங்களை கலைப்பதன் மூலம் அவர்களை அச்சுறுத்துகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இவ்வாறான ஜனநாயகவிரோத நடவடிக்கைகளை உடனடியாக கைவிடுமாறு தொழில்சங்கம் வே;ண்டுகோள் விடுக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாடசாலைகளுக்கு நேரடியாக செல்லும் பொலிஸார் தகவல்களை திரட்டுகின்றனர் என சங்கம் குற்றம்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: