அம்பாறை- பொத்துவில்லில் நிலநடுக்கம் – 4.0 ரிக்டர் அளவில் அதிர்வு ஏற்பட்டதாக அனர்த்த இடர் முகாமைத்துவ நிலையம் அறிவிப்பு!
Friday, February 19th, 2021
அம்பாறை – பொத்துவில் கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 11.44 மணியளவில் 4.0 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை மாட்ட அனர்த்த இடர் முகாமைத்துவ நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.
பொத்துவில் – சர்வோதயபுரம், சின்னஊறணி, ஜலால்தீன்சதுக்கம், களப்புகட்டு பிரதேசங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை எனவும் அனர்த்த இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நிலநடுக்கத்தினை தங்களாலும் உணரக்கூடியதாக இருந்ததாகவும் மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழ்.பல்கலைக்கழக மோதல் - ஏழு மாணவர்களுக்கு வழக்கு!
கொரோனா தொடர்பான வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்றினால் 21 ஆம் திகதி போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீக்கல...
வைத்தியசாலைகளில் சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பு!
|
|
|


