அமைச்சு செயலாளர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை!

Sunday, October 2nd, 2016

அமைச்சு செயலாளர்களின் கொடுப்பனவுகள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சு செயலாளர்களின் வாடகை வாகனங்களுக்கான மாதாந்த கொடுப்பனவை உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அதற்கு நிகரான பதவிகளை வகிக்கும் அதிகாரிகளுக்கான வாகனக் கொடுப்பனவு இவ்வாறு உயர்த்தப்பட உள்ளது.

இதுவரை காலமும் மாதம் ஒன்றுக்கு மூன்று லட்சம் ரூபா வழங்கப்பட்டு வந்தது.இந்த தொகை தற்போது நான்கு இலட்சத்து இருபத்து ஐயாயிரம் ரூபாவாக உயர்த்தப்பட உள்ளது.

இதேவேளை, அமைச்சுக்களின் மேலதிக செயலாளர்கள், அரசாங்க நிறுவனங்களின் பணிப்பாளர் நாயகங்கள் மற்றும் தலைவர்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்ட மாதாந்தக் கொடுப்பனவு 119000 த்திலிருந்து 200000 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளது.

அரசாங்க நிறுவனமொன்றில் பணிப்பாளர் பதவியை வகிப்போருக்கு இதுவரை காலமும் வாகனக் கொடுப்பனவாக மாதாந்தம் 98790 ரூபா வழங்கப்பட்டது இந்த தொகை 125000 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளது.

emblom

Related posts:


எழுவரைகுளத்தை ஆக்கிரமித்த வனஜீவராசிகள் திணைக்களம் அங்கு நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டுகிறது - மருதங்...
பாடசாலைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டாலும் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடு - கல்வி அமைச்சின்...
பூமிக்கு அருகில் வருகைதரும் சனி மற்றும் வியாழன் கோள்கள் – இலங்கை வான்பரப்பில் கண்களுக்கு புலப்படும் ...