அமைச்சுக்களை வசப்படுத்திய வடக்கின் முதல்வர்!

வட மாகாண சபையின் அமைச்சர் பா.சத்தியலிங்கத்திடம் இருந்த மூன்று பதவிகள் நேற்று முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பு நிர்மாணமும் தொழிற்துறையும் மற்றும் மாகாண நிர்வாக அமைச்சு போன்ற சில அமைச்சுக்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் இருக்கின்றன.
இந்தநிலையில், மேலும் முன்று அமைச்சுக்களை அவர் நேற்று பொறுப் பேற்றுள்ளார். குறித்த பதவி கையளிப்பு நேற்று வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தலைமையில் இடம்பெற்றது.
வட மாகாண சுகாதார, சுதேச மருத்துவம், நன்னடத்தையும் சிறுவர் பாராமரிப்புச் சேவைகளும், சமூக சேவைகள், புனர்வாழ்வளித்தல் மற்றும் மகளிர் விவகாரம் ஆகிய அமைச்சுக்கள் பா.சத்தியலிங்கம் வசம் இருந்தன.
இவற்றில் சமூக சேவைகள், புனர்வாழ்வளித்தல் மற்றும் மகளிர் விவகார அமைச்சுக்கள் நேற்றுமுதல் வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாடசாலை மட்டத்திலான மெய்வல்லுநர் நிகழ்வுகள் 14 ஆம் திகதி ஆரம்பம்!
பனை அபிவிருத்தி சபையால் 5 ஆயிரம் கிலோ வெல்லம் உற்பத்தி!
முதல்முறையாக யாழ்ப்பாணத்தில்: இத்தனை கோடி பெறுமதியில் மாட்டிய பொருள்!
|
|