அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்பு – அடுத்த ஆண்டுமுதல் அனைத்து பாடசாலைகளிலும் சூரிய கலங்களை பொருத்த நடவடிக்கை!

Monday, December 11th, 2023

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் சூரிய கலங்களை பொருத்தும் திட்டம் அடுத்த ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரையின் பிரகாரம் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மினுவாங்கொடை கல்விப் பிரிவில் முன்னோடித் திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிக மின்சார கட்டணத்தை எதிர்நோக்கும் பாடசாலைகளுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாதாந்தம் 20,000 ரூபாவுக்கு மேல் மின் கட்டணத்தை பெறும் பாடசாலைகளுக்கு சூரிய மின்சக்தியை பெற்றுக் கொடுக்கும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: