அமைச்சர் டக்ளஸின் பணிப்புரை – அக்கராயன் பல நோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு உழவு இயந்திரம் வழங்கிவைப்பு!

Wednesday, September 8th, 2021

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய அக்கராயன் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்கு உழவு இயந்திரம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் அக்கராயன் பிரதேச இணைப்பாளர், முன்னாள் கிராமசேவகர் சபாரத்தினம் ஊடாக, அக்கராயன் பலநோககுக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் சிவகுமார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக இந்த உழவு இயந்திரம் வழங்கப்பட்டது.

குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்ட தினத்தன்றே மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் ஊடாக, கமநலசேவைகள் திணைக்கள கிளிநொச்சி மாவட்ட ஆணையாளர் தேவரதனிடம் உழவு இயந்திரம் ஒன்றை வழங்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணித்திருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் காலத்தில் இந்திய அரசாங்கத்திடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த வேண்டுகோளுக்கமைவாக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உழவு இயந்திரங்ககளில் ஒன்றையே, அக்கராயன் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினருக்கு வழங்குமாறு பணிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அக்கராயன் கமநலசேவைகள் திணைக்கள பெரும்பாக உத்தியோகத்தர் பார்த்தீபன் குறித்த உழவு இயந்திரத்தை அக்கராயன் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: