அமைச்சர் கபீர் ஹாசீம் இராஜினாமா?

Monday, February 12th, 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசீம் தனது பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்களை மேற்கோள்காட்டி ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியினை அமைச்சர் கபீர் ஹாசீம் இராஜினாமா செய்யவுள்ளார்.

ஒரு நிபந்தனையின் கீழ் அவர் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார். கட்சியின் மற்றைய பதவிகளில் இருக்கும் ஏனையவர்களும் இராஜினாமா செய்ய வேண்டும்.

அப்போது மாத்திரமே தனது இராஜினாமா செல்லுபடியாகும் என்ற நிபந்தனையை அமைச்சர் கபீர் ஹாசீம் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தனது இராஜினாமா கடித்தை கட்சியின் தலைவர் பிதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சபாநாயகர் கரு ஜயசூரிய கட்சியின் தலைமைப்பொறுப்புக்கு தற்காலிகமாக நியமிக்கும் படியும் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள்” என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:


3 ஆம் திகதி வரை மழை தொடரும்; 9ஆம் திகதி மற்றொரு தாழமுக்கம் – யாழ் பல்கலைக்கழக புவியற்துறை விரிவுரையா...
சீனா செல்லத் தயாராகிறார் ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க - சீனக் கப்பல் சர்ச்சைக்கும் தீர்வு க...
11 பேரை காவு வாங்கிய பேருந்து விபத்து - அனுமதி பத்திரத்துக்கு புறம்பாக பயணித்துள்ளதாக இலங்கை தனியார...