அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் 2018ம் கல்வியாண்டிற்கான புலமைப் பரிசில் பெறுபேறுகள்!

Wednesday, October 3rd, 2018

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் புலமைப் பரிசில் வழங்கப்படும் மாணவர்களது எண்ணிக்கையினை அதிகரிப்பது தொடர்பில் கல்வியமைச்சினால் கொண்டுவரப்பட உள்ள யோசனைப் பத்திரம் தொடர்பில் அமைச்சரவை குழுக் கூட்டத்தில் தீர்மானம் எட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறே குறித்த தீர்மானம் எட்ட முடியாது போனால் புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிட ஒருவாரம் வரை பிற்போட வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் அமைச்சரவை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2018ஆம் ஆண்டு கல்வியாண்டிற்கான ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் கடந்த 05ம் திகதி இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை எச்சந்தர்ப்பத்திலும் வெளியிடத் தயாராகி உள்ளதாக பரீட்சைகள் திணைக்கள வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: