அமெரிக்க கடற்படையினர் வழங்கிய ஒத்துழைப்புக்கு இலங்கை நன்றி தெரிவிப்பு!

Saturday, June 17th, 2017

இலங்கையின் வெள்ள நிவாரணப்பணிகளுக்கு அமெரிக்க கடற்படையினர் வழங்கிய ஒத்துழைப்புக்கு இலங்கை அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேரத்ன ஆகியோர், அமரிக்க தூதுவர் அதுல் கேசாப்புடன் யுஎஸ்எஸ் லேக் எரிக் கப்பலுக்கு நேற்று விஜயம் செய்தனர்இதன்போதே இலங்கையின் சார்பில் அமெரிக்காவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அமரிக்க தூதுவர் கேசாப், வெள்ள அனர்த்தத்தின்போது இரண்டு நாட்டு படையினரும் இணைந்து செயற்பட்ட விதம் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் மேம்படுத்தும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்

வெள்ளநிவாரண பணிகளின்போது அமெரிக்கப்படையினர் குடிநீர் சுத்தம் செய்தல், பாடசாலைகளை மீண்டும் இயங்கவைக்கும் பணிகள் உட்பட்ட பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர் அத்துடன், யுஎஸ்எய்ட் நிறுவனம் 2.3மில்லியன் டொலர்களை நிவாரணப்பணிகளுக்காக வழங்கியுள்ளது

Related posts: