அமெரிக்காவிற்கு ஜனாதிபதி விஜயம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் மாதம் அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி அமெரிக்கா விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் 71ஆம் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.
கடந்த பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி ஆடம்பரமற்ற முறையில் எளிமையாக கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் பெரும் எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் பரிவாரங்களுடன் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்திற்கான விஜயம் இடம்பெறுவது வழமையாகக் காணப்பட்டது.
Related posts:
உத்தேச வாக்காளர்களைப் பதிவு செய்யும் சட்டமூலம் குறித்த யோசனைக்கு அனுமதி
தொடரும் வரட்சி : வடக்கு - கிழக்கு அதிக பாதிப்பு!
வடமாகாண ஆசிரியர்களின் கொடுப்பனவு வழங்குவதில் இழுபறி!
|
|
யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மீள்சுழற்சிக்கான கழிவு சேமிப்பு நிலையங்கள் விஸ்தரிப்ப...
“ரப்” கருவி தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தி உண்மைக்குப் புறம்பானது - கல்வி அமைச்சு அறிவி...
போராட்டம் நடத்தும் பலர் வரிசைகளில் நின்றவர்கள் அல்ல - மின்சாரம் பெறுவதில் விவசாயிகள் எதிர்கொள்ளும் ப...