அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவருக்கு அழைப்பானை!

Friday, June 17th, 2016

அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் டீ.எம்.ஜயசுமன சந்திரவங்ச பத்திராஜை எதிர்வரும் ஜுலை மாதம் 25 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு அவருக்கு எதிராக இன்று (17) கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த 3 மனுக்களுக்கு அமைவாகவே இந்த அழைப்பானை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2014 நவம்பர் 17ஆம் திகதியிலிருந்து டிசம்பர் 10ஆம் திகதி வரை அபிவிருத்தி லொத்தர் சபை மூலம் வெளியிடப்பட்ட நியதஜய,சனிதா வாசனா,சுப்பர் போல்,ஜயோதா,அபிவிருத்தி வாசனா போன்ற சீட்டிளுப்பு ஊக்குவிப்புக்காக செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளினால் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டே முன்னாள் தலைவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: