அபிவிருத்தியடைந்துவரும் நாடகளின் நலன்கள் தொடர்பில் ரஷ்யாவின் அக்கறை பாராட்டத்தக்கது – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர் என்ற வகையில் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் சமாதானம் மற்றும் பாதுகாப்புக்காக முன்னிலையாவது தொடர்பில் ரஷ்யாவுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்து ஜனாதிபதி யோட்டடபய ராஜபக்ச ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்..
மேலும் இலங்கையின் பயங்கரவாத ஒழிப்புப் போரின் போது, ரஷ்யா பாரிய ஒத்துழைப்புகளை நல்கியுள்ளது. குறிப்பாக புலனாய்வுத் தகவல் பரிமாற்றங்கள், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான பணப் பயன்பாட்டைத் தடுத்து நிறுத்தல் உள்ளிட்ட அடிப்படைவாத, பயங்கரவாத மற்றும் சைபர் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புகளை மேலும் பலப்படுத்த இலங்கை தயாராக உள்ளதென்று, நிக்கொலாய் பட்ருஷெவிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ரஷ்யாவின் பாதுகாப்புச் சபை செயலாளர் நிக்கொலாய் பட்ருஷெவுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கொவிட் பரவலுக்கு மத்தியிலும் ரஷ்யப் பிரஜைகள் 49,379 பேர் கடந்த ஆண்டு இலங்கைக்கு சுற்றுலா வந்தமையை சுட்டிக்காட்டியிருந்த ஜனாதிபதி ரஷ்யாவின் ஜீஎஸ்பி (GSP) முறைமையின் கீழ் மேற்கொள்ளப்படும் ஏற்றுமதி உற்பத்திகளை விரிவுபடுத்த இலங்கை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் கொழும்புத் துறைமுக நகரம், மின்சக்தி, மருந்து உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், விவசாயத்துறை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளைச் செய்வதற்கு, ரஷ்ய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான இருதரப்புத் தொடர்புகளுக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதியுடன் 65 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
இந்தநிலையில், ரஷ்யாவின் பாதுகாப்புச் சபை செயலாளரின் இந்த விஜயத்தின் ஊடாக இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகள் மேலும் பலப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொவிட்-19 பரவலுக்கு மத்தியிலும், ரஷ்ய பிரஜைகள் இலங்கைக்கான சுற்றுலா மேற்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தடுப்பூசிகளை வழங்கியமைக்கும் நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|