அன்ட்ரா செனிகா கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்க இலங்கையில் அனுமதி!

Friday, January 22nd, 2021

கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான அன்ட்ரா செனிகா என்னும் தடுப்பூசிக்கு இலங்கையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு ஆணைக்குழுவினால் இந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் அவசர தேவைகளின் நிமித்தம் இந்த மருந்துப் பொருளை பயன்படுத்துவதற்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தினால் இந்த அஸ்ட்ரா தடுப்பூசி, கொரோனா நோய் கட்டுப்பாட்டுக்காக உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: