அனைத்து பாடசாலைகளுக்கும் ஜூலை 20 வரை விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Friday, July 15th, 2022

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 18 ஆம் திகதிமுதல் 20ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை காணொளி தொழில்நுட்பம் வாயிலாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது பாடசாலைகளுக்கு 18 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த விடுமுறை காலம் எதிர்வரும் 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: