அனைத்து ஊழியர்களும் பணிக்கு செல்வது இன்னமும் கட்டாயம் இல்லை – அரசாங்கம் தெரிவிப்பு!

அனைத்து ஊழியர்களும் பணிக்கு செல்வது இன்னமும் கட்டாயம் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் நிறுவனங்களின் பிரதானிகள் பொருத்தமான வகையில் ஊழியர்களை மட்டுப்படுத்தி பணிக்கு அழைக்க வேண்டும் என அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் இன்றுமுதல் தளர்த்தப்பட்டாலும் நாடு நூற்றுக்கு நூறு வீதம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக கருத கூடாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் சுகாதார ஆலோசனைக்களுக்கமைய மக்கள் செயற்பட்டால் மாத்திரமே நூற்றுக்கு நூறு வீதம் நாட்டை இயல்பு நிலைக்கு திருப்ப முடியும் எனவும் சுகாதார பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
நூலக தகவல் விஞ்ஞான டிப்ளோமா கற்கை நெறி!
யாழில் மாபெரும் விழிப்புணர்வுப் பேரணி!
இரட்டை சக்திகள் கொண்ட புகையிரதங்களை கொள்வனவு செய்யும் இலங்கை!
|
|