அனைத்து இன மக்களினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் : எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ!

Sunday, June 23rd, 2019

தான் எதிர்காலத்தில் அமைக்கவுள்ள ஆட்சியில் அனைத்து இன மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்துள்ளபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் புதிய ஆட்சியாளர்களை உருவாக்கும் நோக்கில் மக்களுக்கான புதிய வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க நேற்று மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இதனை தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் 7 ஆம் 8 ஆம்  திகதிகளில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்

Related posts: